அஸ்வினை ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது - தினேஷ் கார்த்திக்!

Updated: Sat, Jul 01 2023 17:19 IST
Image Source: Google

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 151 விக்கெட்டுகளும் 92 டெஸ்டில் விளையாடி 474 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐசிசி சிறந்த ஆல்ரவுண்டர் வரிசையில் 2ஆவது இடத்திலும் பந்து வீச்சில் முதலிடத்திலும் உள்ளார்.  

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பை போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குமென எதிரப்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் அஸ்வின் விளையாடுவாரா எனத் தெரியவில்லை. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார். 

இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை ஏன் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கக்கூடாது என தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக், “ஆசியப் போட்டிகளில் இந்திய அணி பி அணியைத்தான் அனுப்புமென நினைக்கிறேன். ஒருநாள் உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இல்லையெனில் ஆசியப் போட்டிகளில் அஸ்வினை கேப்டனாக பிசிசிஐ நியமிக்க வேண்டும். 

இத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்கு அவர் ஆற்றிவரும் பங்களிப்பினை கவனியுங்கள். ஒருமுறையாவது இந்திய அணிக்கு அஸ்வின் கேப்டனாக வேண்டுமென நினைக்கிறேன். அஸ்வின் அதற்கு தகுதியான நபர்தான்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை