விராட் கோலியை கடுமையாக சாடிய சாகித் அஃப்ரிடி!
Afridi questions Kohli: உலகின் முன்னணி வீரரான விராட் கோலி, கடந்த இரண்டரை வருடங்களாக தனது ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் இழந்துவிட்டார். விராட் கோலி கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதம் அடித்திருந்தார். ஜோ ரூட் 17 சதங்கள் அடித்திருந்தார்.
ஆனால், தற்போது விராட் கோலி 27 சதத்தை தாண்டவில்லை. ஆனால் ஜோ ரூட் 27 ஐ தொட்டுவிட்டார். ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சாதனையை கோலி தான் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோலி தற்போது பந்தயத்திலேயே இல்லை. எங்கேயோ இருந்து வந்த ரூட், சச்சின் சாதனையை நெருங்கி விட்டார்.
இதிலிருந்து விராட் கோலியின் இருப்பு தளர்ந்து விட்டது தெரிகிறது. அதுவும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராட் கோலி , ஒரு சாதாரண வீரரை போல் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் 3 கோல்டன் டக் என 341 ரன்கள் மட்டுமே கோலி அடித்திருந்க்கிறார். விராட் கோலி கிரிக்கெட்டை விட தற்போது குடும்பத்தோடு தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இங்கிலாந்து தொடருக்காக ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், விராட் கோலி மாலத்தீவில் குடும்பத்துடன் விடுமுறையில் கழித்து வருகிறார். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் ஆஃபிரிடி, விராட் கோலியை கடுமையாக சாடியுள்ளார்.
அதில்,“விராட் கோலிக்கு நம்பர் 1 வீரராக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் போய்விட்டது. முன்பு ஒரு காலத்தில் நம்பர் 1 வீரராக இருக்க வேண்டும் என்ற வெறி விராட் கோலிக்கு இருந்தது. தற்போதே அதே உத்வேகம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்குள் வந்துவிட்டது. கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டோம்.இனி ஜாலியாக பொழுதை கழிக்கலாம் என்ற யோசனையில் விராட் கோலி உள்ளாரா என்று தெரியவில்லை. Attitude தான் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியம்” என்று ஆஃபிரிடி கூறியுள்ளார்.