சூர்யகுமாருடன் சஞ்சு சாசனை ஒப்பீடக்கூடாது - கபில் தேவ்!

Updated: Fri, Mar 24 2023 12:22 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விகளுக்கு மோசமான பேட்டிங் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் அதில் முக்கியமானவராக சூர்யகுமார் யாதவ் தான் இருந்து வருகிறார்.

டி20 கிரிக்கெட்டில் நம்பர். 1 பேட்டராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் படு மோசமாக சொதப்பி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக ஆஸ்திரேலிய தொடருக்கு வந்த அவர் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் தோல்விக்கே அவர் தான் காரணம் என விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்கச் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் எனவும் ஒப்பிட்டு பேசி வருகிறது.

முன்னணி வீரராக இருந்து வரக்கூடிய சூர்யகுமார் யாதவ் இதுவரை 21 இன்னிங்ஸ்களில் விளையாடி சராசரியாக 24 ரன்களை மட்டுமே வைத்துள்ளார். இதில் 2 அரைசதங்களை மட்டுமே அடித்திருக்கிறார். ஆனால் சஞ்சு சாம்சன் வெறும் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி சராசரியாக 66 ரன்களை வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சஞ்சு சாம்சன் களமிறங்கக்கூடியவர்.

இந்நிலையில் இதுகுறித்து கபில் தேவ் கோபமடைந்துள்ளார். அதில், “சஞ்சு சாம்சனையும் சூர்யகுமார் யாதவையும் ஒப்பிட்டு பேசுவது கொஞ்சம் கூட சரியில்லை. ஒரு கிரிக்கெட் வீரர் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தால், அவர் சொதப்பும் போதும் நிறைய வாய்ப்புகள் தரப்படும். ஒருவேளை சஞ்சு சாம்சன் சொதப்ப தொடங்கிவிட்டால், வேறு ஒரு வீரருடன் ஒப்பிட்டு பேச்சுகள் எழுந்துவிடும். சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவு தர வேண்டும் என நினைத்துவிட்டால், நிச்சயம் நிறைய வாய்ப்புகள் தரும். அது சரியாக தான் இருக்கும்.

வீரர்களின் செயல்பாடுகள் குறித்து ரசிகர்கள் கருத்துக்களை கூற தான் செய்வார்கள். ஒரு போட்டி முடிந்தபிறகு திட்டம் குறித்து பேசுவது மிகவும் சுலபம். சூர்யகுமார் யாதவை 7வது இடத்தில் களமிறக்கி ஃபினிஷராக்க முயற்சித்துள்ளனர். இது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான். இது ஒரு வீரரின் நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யலாம், குறைக்கவும் செய்யலாம். இதனை நிர்வாகம் பார்த்து சரிசெய்யும்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை