என்னை பற்றி தெரியாமல் எதுவும் பேச வேண்டாம் - பிரித்வி ஷா!

Updated: Thu, Mar 17 2022 21:32 IST
Image Source: Google

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. 2018ஆம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையில் இந்திய அணி அண்டர் 19 உலக கோப்பையை வென்றது. அதே ஆண்டே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற பிரித்வி ஷா, காயம் காரணமாக அந்த தொடரில் முழுமையாக விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இந்திய அணியில் 19 வயதிலேயே ஆட கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டார் பிரித்வி ஷா. அதன்பின்னரும் காயம் காரணமாக இந்திய அணியில் அவரால் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவரது ஃபிட்னெஸ் தான் அவருக்கு மிகப்பெரிய எதிரி.

தொடர் காயங்களால் இந்திய அணியில் இடம்பெறமுடியாத பிரித்வி ஷாவின் பெயர், பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 

காயமடைந்த வீரர்கள் அனைவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஃபிட்னெஸை நிரூபிக்க அழைக்கப்பட்டார்கள். அதில் பிரித்வி ஷாவும் ஒருவர். ஃபிட்னெஸ் பெற்ற வீரர்கள் யோ யோ டெஸ்ட்டில் தேறவேண்டும்.

யோ யோ டெஸ்ட்டில் 16.5 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி. ஆனால் பிரித்வி ஷா 15 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்தார். 22 வயதே ஆன பிரித்வி ஷா யோ யோ டெஸ்ட்டில் தேறாததையடுத்து கடும் விமர்சனத்துள்ளானார்.

ஆனால் அவர் யோ யோ டெஸ்ட்டில் அடைந்த தோல்வி, ஐபிஎல்லில் ஆடுவதற்கு தடையாக இருக்காது. அவர் ஐபிஎல்லில் ஆடலாம். ஆனாலும் அவரது ஃபிட்னெஸ் பற்றாக்குறை விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்த தன்னை விமர்சிப்பது குறித்து பிரித்வி ஷா கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய பிரித்வி ஷா, “எனது சூழ்நிலை தெரியாமல் என்னை ஜட்ஜ் செய்யாதீர்கள். உங்களுடைய கர்மாவை நீங்களே உருவாக்கிக்கொள்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை