அவர்களை விட ஹர்திக் பாண்டியா தான் முக்கிய வீரர் - ரிதீந்தர் சிங் சோதி!

Updated: Fri, Nov 03 2023 11:20 IST
'Don't rule out Hardik Pandya to have an impact'- Reetinder Sodhi ahead of India-Pakistan encounter (Image Source: Google)

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித், விராட் கோலியைவிட ஹர்திக் பாண்டியா தான் முக்கியமான வீரர் என்று முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார். 

இன்னும் சில தினங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆசியக் கோப்பைக்கான தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கப்போவதால் எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 28ஆம் தேதி மோதும் முதல் போட்டியும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித், விராட் கோலியைவிட ஹர்திக் பாண்டியா தான் முக்கியமான வீரர் என்று முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் ஹர்திக் முக்கியமானவராக இருப்பார் என நினைக்கிறேன். அவர் தாமதமாக பரபரப்பான வடிவத்தில் இருந்தார் மற்றும் அணிக்கு ஒரு சிறந்த மறுபிரவேசம் செய்துள்ளார். எனவே நீங்கள் ரோஹித், விராட் மற்றும் பாபர் போன்ற நட்சத்திரங்களைப் பற்றி பேசலாம், ஆனால் ஹர்திக் பாண்டியாவின் தாக்கத்தை நிராகரிக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்திய வீரர் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதுகுறித்து கருத்து தெரிவித்த ரிதீந்தர் சிங் சோதி,“பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். ஏனெனில் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் யாராலும் பும்ராவின் இடத்தை நிரப்ப முடியாது. 

உலகக்கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் பும்ராவின் இடம் தற்போது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்குள் உடற்தகுதி பெறவில்லை என்றால் இந்திய அணிக்கு அது பெரிய சிக்கலாக மாறும்” என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை