கோலி குறித்து கங்குலி தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தரும் சல்மான் பட்!

Updated: Fri, Dec 10 2021 19:00 IST
Don’t See Any Angle Of Disrespect – Salman Butt Backs Sourav Ganguly’s Statement (Image Source: Google)

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருந்துவந்தார் விராட் கோலி. 2017ஆம் ஆண்டு தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து அதிலிருந்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார் கோலி. டெஸ்ட் அணியின் கேப்டன்சியை 2014ஆம் ஆண்டே ஏற்றார்.

4 ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாகவே வழிநடத்தி வந்தார் விராட் கோலி. ஆனால் அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையைக் கூட ஜெயிக்கவில்லை என்பதுதான் பெரும் விமர்சனமாக இருந்து வந்தது. ஆனாலும் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது. 

ஐசிசி கோப்பையை ஜெயிக்கவில்லை என்பது காலப்போக்கில் அவருக்கே பெரும் அழுத்தமாக மாறியது. ஐபிஎல்லிலும் அவரது தலைமையில் ஆர்சிபி அணி கோப்பை ஜெயிக்கவில்லை. எல்லாம் சேர்ந்து பெரும் அழுத்தமாக மாற, அவரது பேட்டிங் ஃபார்மும் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் இல்லை. அவர் சதமடித்தே 2 ஆண்டுகல் ஆகிவிட்டன.

இந்நிலையில், தனது பணிச்சுமையை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அதிரடியாக அறிவித்தார். அவரது தலைமையில் டி20 கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. 

இதையடுத்து டி20  அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித்தின் தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி. டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டபோதே, ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளிவந்துவிட்டது. அந்தவகையில் கடந்த 8ஆம் தேதி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் ஆடி 65 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்தார். 

கங்குலியின் கருத்து குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், “விராட் கோலி டி20 கேப்டன்சியிலிருந்து கோலி விலகக்கூடாது என்றுதான் பிசிசிஐ நினைத்திருக்கிறது. டி20 அணிக்கு ஒரு கேப்டனும், ஒருநாள் அணிக்கு ஒரு கேப்டனும் நியமிக்கமுடியாது. 

அந்த லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இங்கிலாந்து ஒருநாள் அணியில் ரூட் ஒரு வீரராக ஆடுகிறார். டெஸ்ட் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். இதில் எந்தவிதமான அவமரியாதையும் இல்லை என்று நினைப்பதாக” கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை