DPL : மைதானத்தில் மோசமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரிய ஷகில் அல் ஹசன்!

Updated: Fri, Jun 11 2021 19:57 IST
Image Source: Google

வங்கதேசத்தின் உள்ளூர் டி20 தொடரான தாக்கா பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோஹம்மெதான் ஸ்போர்டிங் கிளப் - அபஹானி லிமிடேட் அணிகள் மோதின.

இப்போட்டியின் போது வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு பந்து வீசிய ஷகிப் அல் ஹசன்,எல்.பி.டபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த ஷாகிப் அல் ஹசன் அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதோடு நிற்காமல், கள நடுவருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து கள நடுவரை நோக்கி வேகமாக வந்த ஷகிப், ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வீசினார்.

இந்நிலையில் போட்டியின் போது மோசமான செயல்பாட்டைச் செய்த ஷகில் அல் ஹசனின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தனது தவறுக்கு மன்னிப்பு கோருவதாக ஷகில் அல் ஹசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

 

இதுகுறித்து ஷகிப் அல் ஹசன் வெளியிட்ட பதிவில்,“அன்புள்ள ரசிகர்களே, எனது மனநிலையை இழந்து போட்டியின் போது மோசமாக நடந்து கொண்டதற்கு மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடாது, ஆனால் சில சமயங்களில் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக இது துரதிர்ஷ்டவசமாக நடக்கிறது. எனது இந்த தவறுக்கு அணி நிர்வாகத்திடமும், போட்டி அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் இதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஷகிப் அல் ஹசனின் இந்த செயல்பாட்டால் இப்போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை