டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டெல்லி பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்று நார்த் டெல்லி மற்றும் சௌத் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சௌத் டெல்லி அணியில் சர்தக் ரே 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

இதனையடுத்து ஜோடி சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஆயூஷ் பதோனி இணை அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரியும், சிக்ஸர்களையும் மழையாக பொழிந்தனர். இவர்களில் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணி பந்துவீச்சாளர் தடுமாறினர். தொடர்ந்து இருவரும் அபாரமாக விளையாடி வந்ததுடன், இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். 

Advertisement

பின்னர் 8 பவுண்டரி, 19 சிக்ஸர்கள் என 165 ரன்கள் எடுத்த நிலையில் ஆயூஷ் பதோனியும், 10 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 120 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யாவும் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பிம் சௌத் டெல்லி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 308 ரன்களைக் குவித்தது. நார்த் டெல்லி அணி தரப்பில் சித்தார்த் சோலங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நார்த் டெல்லி அணி வீரர்கள் சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்படி, வைபவ் கந்த்பால் 23, சர்தக் ரஞ்சன் 11, யஜாஸ் சர்மா 32, யாஷ் தபாஸ் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த வைபவ் ராவல் - பிரன்ஷு விஜய்ரன் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் விஜய்ரன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் விஜய்ரன் 62 ரனக்ளிலும், வைபவ் 32 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் நார்த் டெல்லி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சௌத் டெல்லி அணியானது 112 ரன்கள் வித்தியாசத்தில் நார்த் டெல்லி அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News