தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமானது புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடர். இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன், ஹைதராபாத், மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன. இதில் திருநெல்வேலியில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Advertisement

இதனையடுத்து திண்டுக்கல்லில் நடைபெறும் இத்தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டிஎன்சிஏ லெவன் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதிலிருந்து எந்த இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக விளையாடினார்.

Advertisement

அந்தவகையில் டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான போட்டியின் போது மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் அவரது கையில் காயமடைந்ததாக தகவல் வெளியானது. எனினும், அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இந்த காயம் காரணமாக எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா என்ற சந்தேகத்தையும் கிளப்பியது.

இந்நிலையில் தனது காயம் காரணமாக துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு அவர் தனது உடற்தகுதியை மீட்டெடுக்கு முயற்சியில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் இடம்பிடித்திருந்த இந்தியா சி அணி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கொண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களே வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்பதால், சூர்யகுமார் யாதவிற்கு இது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஆனல் தற்போது அவரால் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகளில் விளையாட முடியாது என்பதால், அவரது டெஸ்ட் கம்பேக்கும் கேள்விக்குறியாகியுள்ளது.

துலீக் கோப்பை தொடருக்கான அணிகள்

Advertisement

அணி ஏ: ஷுப்மான் கில் (கே), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ்,ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத்.

அணி பி: அபிமன்யு ஈஸ்வரன் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி (உடற்தகுதி), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என். ஜெகதீசன்.

அணி சி: ருதுராஜ் கெய்க்வாட் (கே), சாய் சுதர்ஷன், ராஜத் படிதார், அபிஷேக் போரல், சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜூயல், சந்தீப் வாரியர்.

Advertisement

அணி டி: ஸ்ரேயாஸ் ஐயர் (கே), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் பாடிக்கல், இஷான் கிஷன், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத், சவுரப் குமார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News