துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கியது. அதன்படி இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய பாபா இந்திரஜித் அரைசதம் விளாசினார். 

Advertisement

பின்னர் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 111 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜிதும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் போரலும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.  இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்டும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Advertisement

இதன்மூலம் இந்தியா சி அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களுடனும்,மனவ் சுதர் 8 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்தனர். அதன்பின் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மனவ் சுதர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதன் காரணமாக இந்திய சி அணி முதல் இன்னிங்ஸில் 525 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியா பி அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா பி அணிக்கு நாராயண் ஜெகதீசன் - கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

இதன்மூலம் இந்தியா பி அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 124 ரன்களைக் குவித்துள்ளது. இதில் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களையும், நாராயண் ஜெகதீசன் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்களையும் குவித்து களத்தில் உள்ளனர். இதனையடுத்து 401 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா பி அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News