இளம் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ - இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் 22 ரன்களுக்கும், ஃபர்ஹான் 12 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தஹிப் தஹிர் 26, கசிம் அக்ரம் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஒமைர் யூசுப் - முகமது ஹாரிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 88 ரன்களுக்கு ஒமைர் யூசுப்பும், 52 ரன்களுக்கு முகமது ஹாரிஸும் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் முபசிர் கான் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் லசித் ரன்கள் ஏதுமின்றியும், மினோத் பானுகா 1 ரன்னுக்கும், சூரியபந்தரா 10 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - சஹான் ஆராச்சிகே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்கா ஃபெர்னாண்டோ 97 ரன்களுக்கும், சஹான் ஆராசிகே 97 ரன்களிலும் என ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 45.4 ஓவர்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷத் இக்பால் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் ஏ அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News