Mohammad haris
ஆசிய கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்; இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதல்!
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. அதேசமயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணிக்கான போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் உள்ளன. அதன்படி நேற்று நடைபெறும் 5ஆவது சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 4 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த சைம் அயுப்பும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 13 ரன்னிலும், கேப்டன் சல்மான் அலி ஆக 19 ரன்னிலும், உசைன் தாலத் 3 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடி தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Mohammad haris
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 135 ரன்களில் சுருட்டிய வங்கதேச அணி!
வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs BAN, 3rd T20I: முகமது ஹாரிஸ் சதம்; வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய இஸ்லாமாபாத் யுனைடெட்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் முகமது ஹாரிஸ் திவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
முகமது ஹாரிஸை க்ளீன் போல்டாக்கிய அன்ஷுல் கம்போஜ் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர் அன்ஷுல் கம்போஜ் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எல்பிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் தம்புலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கண்டி!
தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் இறுதிப்போட்டியில் பி லௌவ் கண்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. ...
-
எல்பிஎல் 2023 எலிமினேட்டர்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பி லௌவ் கண்டி!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பி லௌவ் கண்டி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ...
-
எல்பிஎல் 2023 எலிமினேட்டர்: முகமது ஹாரிஸ் அதிரடி; ஜாஃப்னா அணிக்கு 189 டார்கெட்!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பி லௌவ் கண்டி அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நாங்கள் ஒன்றும் இந்தியாவை சிறு குழந்தைகளை கொண்ட அணியை அனுப்பி வைக்குமாறு கேட்க கிடையாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார். ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
இலங்கை ஏ அணிக்கு எதிரான அரைசயிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை - சூர்யகுமார் குறித்து முகமது ஹாரிஸ்!
சூர்யகுமார் யாதவ் நிலையை எட்டுவதற்கு நிறைய உழைப்பு தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
என்னால் அதிரடியாக விளையாட முடிந்தாலும் இதனை செய்யவே எனக்கு விருப்பும் - முகமது ஹாரிஸ்!
இந்தியாவின் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவின், ஆடம் கில்கிறிஸ்ட் மூன்று வகையான கிரிக்கெட்டிலுமே அதிரடியாக விளையாடியது போல் என்னாலும் விளையாட முடியும் என பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார். ...
-
PSL 2023: முகமது ஹாரிஸ் அரைசதம்; லாகூருக்கு 172 டார்கெட்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: இஸ்லாமாபாத்தை வெளியேற்றியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47