நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதான் - அம்பத்தி ராயுடு!

Updated: Wed, Jun 14 2023 22:31 IST
Image Source: Google

சமீபத்தில் நடைபெற்ற 16ஆவது சீசன் ஐபிஎல் தொடருடன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார் அம்பத்தி ராயுடு. 37 வயதான ராயுடு ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்தவர். 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து 2004 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியை வழி நடத்தினார். 

திறமையான அதிரடி பேட்ஸ்மியான இவர் எனக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாததால் பிசிசிஐ கிரிக்கெட்டில் இருந்து விலகி கபில்தேவ் தலைமையிலான ஐசிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது . 2010 ஆம் ஆண்டு பிசிசிஐ வழங்கிய பொது மன்னிப்பை ஏற்று மீண்டும் முதல் தர கிரிக்கெட்டிற்கு திரும்பிய ராயுடு அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்தார் . 

இதன் மூலம் இந்திய அணிக்கும் தேர்வானார். தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு சிறப்பாக பங்களிப்பை அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம் பெற்று இருந்தார் அம்பத்தி ராயுடு. இதுவரை 58 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி இருக்கும் ராயுடு 1694 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் பத்து அரை சதங்களும் மூன்று சதங்களும் அடங்கும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இவரது சராசரி 47.06 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 79.05.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருதப்பட்ட ராயுடு அந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியா அணிக்கு நான்காவது பேட்ஸ்மனாக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பாக இவரை நீக்கிவிட்டு விஜய் சங்கரை தேர்வு செய்தது இந்திய கிரிக்கெட் அணி . இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படையாகவே காட்டினார் அம்பத்தி ராயுடு .

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் 3டி கண்ணாடி ஒன்றின் புகைப்படத்தையும் பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். அடுத்த உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தான் எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் அம்பத்தி ராயுடு .

இது குறித்து பேசிய அவர், “நான் எனது ஆரம்பகால கிரிக்கெட்டின்போது தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளேன். அப்போது அவர்களுக்கும் எனக்கு பிரச்னைகள் இருந்தது. இந்தக் காரணத்தால்கூட நான் 2019 அணியில் இல்லாமல் போயிருக்கலாம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை