ENG vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் போட்டியின் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி இன்றைய போட்டிகான இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, ஹசீப் ஹமீத், மார்க் வுட் ஆகியோரும், இந்திய அணியில் இஷாந்த் சர்மாவும் அணியின் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மா இணை களமிறங்கியது. தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின் 19 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரோஹித் சர்மா 35 ரன்களையும், கே.எல்.ராகுல் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.