இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அபாரமாக விளையாட இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.

Advertisement

இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை கே.எல். ராகுல் சந்தித்தார். ஒல்லி ராபின்சன் பந்து வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரஹானே ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

Advertisement

அதன் பின் 6ஆவது விக்கெட்டுக்கு ரிஷாப் பந்த் உடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான விளையாடியது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்னைத் தாண்டியது.

இந்தியாவின் ஸ்கோர் 331 ரன்னாக இருக்கும்போது ரிஷாப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

ஜடேஜா ஒரு பக்கம் நம்பிக்கையுடன் விளையாடினார். அடுத்து இஷாந்த் சர்மா களம் இறங்கினார். 2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா அரைசதம் நோக்கிச் சென்றார். இஷாந்த் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்திருந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார்.

Advertisement

ஜடேஜா 40 ரன்னில் வெளியேற இந்தியா 126.1 ஓவரில் 364 ரன்கள் குவித்து ஆல் - அவுட் ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஒல்லி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் - டோமினிக் சிப்லி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதன் மூலம் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News