ENG vs IND, 3rd Test: மாலன், ரூட் அபாரம்; வீக்கெட் வீழ்த்த திணறும் இந்தியா!
லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளா்கள் ஜேம்ஸ் ஆண்டா்சன், கிரெய்க் ஓவா்டன் ஆகியோா் முற்றிலுமாக சரித்தனா். ரோஹித், ரஹானே மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுக்க, 6 போ் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனா். 3 போ் டக் அவுட்டாகினா். ஆண்டர்சனும் ஓவர்டனும் தலா 3 விக்கெட்டுகளையும் ஆலி ராபின்சன், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 42 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 52, ஹசீப் ஹமீது 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். மேலும் 42 ரன்கள் முன்னிலையும் பெற்றிருந்தது.
அதன்பின் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இந்தியப் பந்துவீச்சை திறம்பட சமாளித்தார்கள். நிதானமாக விளையாடி வந்த பர்ன்ஸை 61 ரன்களில் போல்ட் செய்தார் ஷமி. இதன்பிறகு வந்த மலானும் நன்கு விளையாடினார். இன்று ரன்கள் எடுக்கத் தடுமாறிய ஹமீது, 68 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் போல்ட் ஆனார்.
பின்னர் மாலனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 298 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ரூட் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி தரப்பில் ஷமி, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.