ENG vs IND, 5th Test: நங்கூரமாய் நின்ற ரூட், பேர்ஸ்டோவ்!
இங்கிலாங்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களும் எடுத்துள்ளது. இங்கிலாந்து முதல் இன்ன்னிங்சில் 284 ரன்களை எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்தியாவின் சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா 66 ரன்களும், ரிஷப் பந்த் 57 ரன்களும், கோலி 20 ரன்களும், ஜடேஜே 23 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் லீஸ் - ஜாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அலெக்ஸ் லீஸ் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 46 ரன்களில் ஜாக் கிரௌலி ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஒல்லி போப் ரன் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் லீஸும் 56 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 150 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்துள்ளனர்.
இதன்மூலம் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ரூட் 76, ஜானி பேர்ஸ்டோவ் 72 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியும், 7 விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.