ENG vs IND, 5th Test: அதிரடியில் மிரட்டும் ரிஷப் பந்த்!

Updated: Fri, Jul 01 2022 21:04 IST
Image Source: Google

இந்தியா -  இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது போட்டி.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா கரோனா காரணமாக ஆடாததால், ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சுப்மன் கில் (17) மற்றும் புஜாரா (13) ஆகிய இருவரும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய ஹனுமா விஹாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் மாட்டி பாட்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 

அதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐரும் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - ரவீந்திர ஜடேஜா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 51 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 53 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மாட்டி பாட்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை