இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிய, இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறாதது, பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது. 

Advertisement

இதையடுத்து லீட்ஸில் நடைபெறும் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அஸ்வின் இடம்பெறுவார என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் நிலவிவருகிறது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக, ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஏனெனில் கடந்து இரண்டு போட்டிகளில் விளையாடிய ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பைத் தந்தாலும் அவரால் இங்கிலாந்து அணிக்கெதிராக விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை. இதன் காரணமாகவே மூன்றாவது டெஸ்டில் அஸ்வின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News