ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் பிரசித் கிருஷ்ணா!

Updated: Wed, Sep 01 2021 15:52 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. 
மேலும் இரு அணிகளுக்கும் இடையேயனா நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா இத்தொடரின் ஆரம்பம் முதல் இந்திய அணியினருடன் பயணித்து வருகிறார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

மேலும் தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்பட்டு வருவதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வளிக்கும் எண்ணத்தில் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::