நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டெவான் கான்வே, டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி சவுதாம்டானில் இன்று நடந்து வருகிறது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் இப்போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்ட்டது டாஸ் போடப்பட்டது.அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - ஹாரி ப்ரூக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 ரன்களை எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் ரன்கள் ஏதுமின்றியும், பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ஹாரி ப்ரூக் 2 ரன்களுக்கும், கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து மொயீன் அலி - லியாம் லிவிங்ஸ்டோன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொயீன் அலி 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சாம் கரண் களமிறங்கினார். ஒருபக்கம் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் சாம் கரண் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டொன் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்து 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 95 ரன்களைச் சேர்த்தார்.

அவருடன் இணைந்து விளையாடிய சாம் கரண் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News