முன்னால் கேப்டன் சாதனையை காலி செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

Updated: Thu, Jun 10 2021 19:56 IST
Image Source: Google

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அலஸ்டைர் குக்கிடம் இருந்து பறித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பர்மிங்ஹாமில் தொடங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் களமிறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். 

அச்சாதனையானது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்பது தான். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆலஸ்டர் குக் 161 போட்டிகளில் பங்கேற்றிருந்ததே சாதனையாக இருந்தது. 

தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 162 போட்டிகளில் பங்கேற்று அச்சாதனையை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

இப்பட்டியலில் இந்திய அணியின் சச்சின் தெண்டுல்கர் 200 டெஸ்டிலும், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் தலா 168 போட்டிகளிலும், கல்லீஸ் 165 போட்டிகளிலும், சந்தர்பால் 164 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை