நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

Advertisement

இதையடுத்து இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் ஒருபக்கம் ஃபின் ஆலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் டெவான் கான்வே 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். பின் ஆலனுடன் இணைந்த கிளென் பிலீப்ஸும் தனது அதிரடியை ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபின் ஆலன் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலீப்ஸ் தனது 9ஆவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் லிவிங்ஸ்டோன் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி அமர்களப்படுத்திய கிளென் பிலீப்ஸ் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 69 ரன்களை விளாசி கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும், லுக் வுட், லியாம் லிவிங்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News