ENG vs PAK, 2nd ODI: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சு!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இத்தொடரின் முதல் போட்டியில் வலிமை வாய்ந்த பாகிஸ்தான் அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அனுபவமில்லாத இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனால் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் லண்டனில் மழை பெய்த காரணத்தால் இப்போட்டியின் டாஸ் நிகழ்வு தாமதமாக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து - பிலிப் சால்ட், டேவிட் மாலன், ஸாக் கிரௌலி, ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜான் சிம்ப்சன், லூயிஸ் கிரிகோரி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், மேத்யூ பார்கின்சன்
பாகிஸ்தான் - இமாம் உல் ஹக், ஃபகர் ஸமான், பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், சோஹைப் மக்சூத், சதாப் கான், ஃபஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவூஃப்.