இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் - மாலன் இணை அதிரடியான தொடக்கத்தை வெளிப்படுத்தினர்.
இதில் டி காக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த மாலனும் அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வெண்டர் டு சென் - ஐடன் மார்க்ராம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வெண்டர் டூசென் சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய ஐடன் மார்க்ரமும் அரைசதம் கடந்தார். அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 77 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடித்து விளையாடிவந்த வேண்டர் டூசெனும் 133 ரன்களில் லிவிங்ஸ்டோனிடம் விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து வந்த டேவிட் மில்லரும், ஹென்ரிச் கிளாசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வெண்டர் டூசென் 133 ரன்களை விளாசினார். இங்கிலாந்து அணி தரப்பில் லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.