ENG vs WI, 3rd Test: அணியில் மாற்றங்கள் செய்யாதது குறித்து பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்ஹாமில் நடைபெற உள்ளது.
இதில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் அணியில் மாற்றம் செய்யாதது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இந்த நேரத்தில் நாங்கள் ஒரே அணியுடன் பயணிக்கவுள்ளோம், ஏனென்றால் வெற்றிபெறும் அணியில் மாற்றங்கள் செய்வது அவசியம் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கும் தோழர்களைப் பார்க்கும்போது, மார்க் வுட் எப்படிப் பந்துவீசுகிறார் என்பதாலேயே தனித்து நிற்கிறார்.
அதனால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் அவரிடமிருந்து இதுபோன்ற செயல்பாடுகளை பெருவது மிகவும் சாத்தியமில்லாத ஒன்று. அடுத்த தொடருக்கு தகுந்த இடைவெளி கிடைத்தாலும், வேகப்பந்து வீச்சு மிகவும் கடினமாக இருப்பதால், இயல்பாகவே பந்துவீச்சு வரிசையில் மாற்றத்தைக் காணலாம். ஆனால் அது இப்போட்டிக்கு இன்னும் தேவைப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வுட், சோயிப் பஷீர்.