ENG vs WI, 2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் தொடர் போட்டி இன்று பார்போடாஸில் தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் பங்கேற்காத நிலையில் அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் சாகிப் மஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து : அலெக்ஸ் லீஸ், சாக் கிராலி, ஜோ ரூட், டான் லாரன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், கிரேக் ஓவர்டன், ஜாக் லீச், சாகிப் மஹ்மூத்.