சாம்பியன்ஸ் கோப்பை 2025: தோனியின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!

Updated: Fri, Feb 21 2025 22:11 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது.

அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் இரு அணிகளும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு

இப்போட்டியில் ஜோஸ் பட்லர் ஐந்து சிக்ஸர்கள் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை முந்தி ஆறாவது இடத்தைப் பிடிப்பார். இதுவரை ஜோஸ் பட்லர் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 375 போட்டிகளில் 380 இன்னிங்ஸ்களில் 355 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதேசமயம் மகேந்திர சிங் தோனி 538 போட்டிகளில் 526 இன்னிங்ஸ்களில் 359 சிக்ஸர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜானி பேர்ஸ்டோவ்வை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு

இப்போட்டியில் ஜோஸ் பட்லர் 26 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த 7ஆவது வீரர் எனும் பெருமையை பெறுவார். தற்போது இந்த பட்டியலில் ஜானி பேர்ஸ்டோவ் 348 இன்னிங்ஸ்களில் 11581 ரன்களை எடுத்து ஏழாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் ஜோஸ் பட்லர் 380 இன்னிங்ஸில் 11,556 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி: பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஜேமி ஓவர்டன், சாகிப் மஹ்மூத், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை