இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரிஷப் பந்த் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.

Advertisement

132 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்திருந்தது. 

இதையடுத்து இந்திய அணி தரப்பில் புஜாரா 50 ரன்களுடனும், ரிஷப் பந்த் 30 ரன்களுடனும் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் புஜாரா 66 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார். முதல் இன்னிங்ஸில் சதமடித்து 146 ரன்களை குவித்த ரிஷப் பண்ட் 2வது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து, 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜடேஜா 17 ரன்களுடனும், முகமது ஷமி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News