பத்தாண்டுகால காத்திருப்பை நிறைவு செய்த இங்கிலாந்து!

Updated: Thu, Aug 26 2021 14:25 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 78 ரன்களில் ஆல் அவுட்டாகினர். இந்திய அணி சார்பாக ரோஹித் அதிகபட்சமாக 19 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை 42 ஓவர்களை சந்தித்து 120 ரன்களை குவித்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் யாதெனில் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை அவர்கள் ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. 

முதல் விக்கெட்டுக்கு தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹஸீப் ஹமீது ஆகியோர் 120 ரன்கள் குவித்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விசயம் யாதெனில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து ஓப்பனர்கள் குவிக்கும் முதல் 100 ரன்கள் பாட்னர்ஷிப் இதுதான்.

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக அலெஸ்டர் குக் மற்றும் ஆண்ட்ரு ஸ்டார்ஸ் ஆகியோர் இணைந்து நூறு ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதற்கு பின்னர் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இவ்விருவரும் இந்திய அணிக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை