NZ vs ENG, 1st Test: பிளெண்டன் சதத்தால் தப்பிய நியூசிலாந்து; தடுமாற்றதுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து!

Updated: Fri, Feb 17 2023 14:51 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மௌண்ட் மாங்கனூவில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி 4, பென் டக்கெட் 14 பவுண்டரிகளுடன் 84, ஆலி போப் 6 பவுண்டரிகளுடன் 42, ஜோ ரூட் 14 ரன்கள் சோ்த்தனா். அணியில் அதிகபட்சமாக ஹேரி புரூக் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19, பென் ஃபோக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 38, ஸ்டூவா்ட் பிராட் 2, ஜேக் லீச்1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, 58.2 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்த்திருந்த நிலையில் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது இங்கிலாந்து. 

அப்போது ஒல்லி ராபின்சன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். நியூஸிலாந்து பௌலிங்கில் நீல் வாக்னா் 4, டிம் சௌதி, ஸ்காட் குக்கெலெஜன் ஆகியோா் தலா 2, பிளோ் டிக்னா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, நேற்றை நாள் முடிவில் 18 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் சோ்த்திருக்கிறது. இதில் டெவான் கான்வே 17, நீல் வாக்னா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் வாக்னர் 27 ரன்களில் ஆட்டமிழக்க, டெவான் கான்வே தனது அரைசதத்தை பதிவுச் செய்தார்.

பின்னர் அவருடன் இணைந்த டாம் பிளெண்டலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 77 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல் 7, குக்கெலெஜன் 20, டிம் சௌதீ 10 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த டாம் பிளெண்டன் சதமடித்து அசத்தினார். அதன்பின் 138 ரன்கள் எடுத்திருந்த பிளெண்டல் ஆட்டமிழக்க நியூசிலாந்தின் இன்னிங்ஸும் முடிவுக்கு வந்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 19 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸாக் கிரௌலி 28 ரன்களிலும், பென் டக்கெட் 25 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இதனால் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஒல்லி போப் 14 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிக்னர், குக்கெலெஜன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை