நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை & பாகிஸ்தான்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் சாம்பியன் பட்டும் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
மேற்கொண்டு உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விலகினார். இதனையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக டாம் லேதம் அல்லது டேரில் மிட்செல் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமான தங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களூக்கான ஆட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட் அதொடரில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 28ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது ஜனவரி 05ஆம் தேதி முதலும் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் மார்ச் 16ஆம் தேதி தொடங்குகிறது.
நியூசிலாந்து vs இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர்
- முதல் டெஸ்ட்: நவம்பர் 28-டிசம்பர் 2, கிறிஸ்ட்சர்ச்
- இரண்டாவது டெஸ்ட்: டிசம்பர் 6-10, வெலிங்டன்
- மூன்றாவது டெஸ்ட்: டிசம்பர் 14-18, ஹாமில்டன்
நியூசிலாந்து vs இலங்கை தொடர்
- முதல் டி20ஈ: டிசம்பர் 28, டௌரங்கா
- இரண்டாவது டி20ஐ: டிசம்பர் 30, டௌரங்கா
- மூன்றாவது டி20ஐ: ஜனவரி 2, நெல்சன்
- முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 5, வெலிங்டன்
- இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 8, ஹாமில்டன்
- மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 11, ஆக்லாந்து
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
நியூசிலாந்து vs பாகிஸ்தான் தொடர்
- முதல் டி20: மார்ச் 16, கிறிஸ்ட்சர்ச்
- இரண்டாவது டி20: மார்ச் 18, டுனெடின்
- மூன்றாவது டி20: மார்ச் 21, ஆக்லாந்து
- நான்காவது டி20: மார்ச் 23, டௌரங்கா
- ஐந்தாவது டி20: மார்ச் 26, வெலிங்டன்
- முதல் ஒருநாள் போட்டி: மார்ச் 29, நேப்பியர்
- இரண்டாவது ஒருநாள் போட்டி: ஏப்ரல் 2, ஹாமில்டன்
- மூன்றாவது ஒருநாள் போட்டி: ஏப்ரல் 5, டௌரங்கா