Advertisement
Advertisement

Pakistan tour new zealand

NZ vs PAK: கடைசி டி20 போட்டியிலிருந்து டெரில் மிட்செலுக்கு ஓய்வு;  மற்று வீரராக ரச்சின் ரவீந்திரா சே
Image Source: Google

NZ vs PAK: கடைசி டி20 போட்டியிலிருந்து டெரில் மிட்செலுக்கு ஓய்வு; மற்று வீரராக ரச்சின் ரவீந்திரா சேர்ப்பு!

By Bharathi Kannan January 20, 2024 • 19:30 PM View: 130

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதனை நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும் அசத்தியது. 

Related Cricket News on Pakistan tour new zealand