வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜேசன் ராய் - டாம் பாண்டன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. அதன்பின் மோயின் அலி தனது பங்கிற்கு 31 ரன்களைச் சேர்த்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர், ஃபாபியன் ஆலன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷாய் ஹோப், பூரன், பொல்லர்ட், பிராவோ, ஹோல்டர் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. 

பின்னர் ஜோடி சேர்ந்த ரோமாரிய செஃபெர்ட் - அகில் ஹொசைன் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இறுதி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 30 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல் உருவானது. 

Advertisement

அந்த ஓவரை எதிர்கொண்ட அகீல் ஹொசைன் 2 பவுண்டரி, 3 அடுத்தடுத்த சிக்சர்களை விளாசியனார். ஆனாலும் அந்த அணியால் இன்னிங்ஸ் முடிவில் 170 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மொயீன் அலி அட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News