இங்கிலாந்து தொடர் ஒன்றும் பயிற்சி போட்டிகள் அல்ல - நெய்ல் வாக்னர்

Updated: Mon, May 17 2021 22:13 IST
England Tests not warm-ups for WTC final, says Wagner (Image Source: Google)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதவுள்ளது. 

இதற்கிடையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான 20 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு, இன்று லண்டனிற்கு சென்றுள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒன்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பயிற்சி ஆட்டம் கிடையாது என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“இங்கிலாந்துக்கு எதிரான இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களாக நாங்கள் கருத போவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் விளையாடுவதைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை