ENG vs IND, 4th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்துமுடிந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனிலையில் உள்ளன.
இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
முதல் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் மழையால் முடிவு பாதிக்கப்பட்து. லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வி நிலைக்கு சென்று அதில் இருந்து மீண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியை பெற்றது. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று அசத்தியது.
இதனால் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
போட்டி முன்னோட்டம்
இந்திய அணி
இந்திய அணியைப் பொறுத்வரை பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிபடுத்தி வருவது அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அதிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 78 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் அரைசதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது சற்றே நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால் ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோரது ஆட்டம் தொடர்ந்து ஏமாற்றத்தை தந்து வருகிறது.
இதனால் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ், மயாங்க் அகர்வால் அகியோர் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேசமயம் பந்துவீச்சாளர்களின் முகமது சிராஜ், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இருப்பினும் இஷாந்த் சர்மா தொடர்ந்து விக்கெட் வீழ்த்த தடுமாறுவதால் அவருக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அதிலும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹாசீப் அமீத் - ரோரி பர்ன்ஸ் இணை அபாரமாக விளையாடி அணியை முன்னிலைப்படுத்தியது. அவர்களுடன் ஜோ ரூட்டும், டேவிட் மாலன் அபாரமான ஃபார்மில் இருப்பது இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மேலும் தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக 3ஆவது டெஸ்டிலிருந்து விலகிய இங்கிலாந்து வேகப்பந்து வீரர் மார்க்வுட் இந்த டெஸ்டில் விளையாடவுள்ளார். மேலும் அவருடன் கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
நேருக்கு நேர்
இரு அணிகளும் நாளை மோதுவது 129ஆவது டெஸ்ட் ஆகும். இதில் இந்தியா 30 போட்டிகளிலும், இங்கிலாந்து 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 50 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
உத்தேச அணி
இங்கிலாந்து - ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ், டேவிட் மலன், ஜோ ரூட், ஜானி பெயர்ஸ்டோவ், டான் லாரன்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ்/ சாம் கர்ரன், கிரேக் ஓவர்டன், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்தியா - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே/ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா/ஆர் அஸ்வின், இஷாந்த் சர்மா/ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இங்கிலாந்து vs இந்தியா, 4ஆவது டெஸ்ட் பேண்டஸி லெவன்:
- விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோச்
- பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹசீப் ஹமீத், ஜோ ரூட்
- ஆல் -ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஸ்வி, மொயீன் அலி
- பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன்.