டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இங்கிலாந்து vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Nov 09 2021 19:03 IST
England vs New Zealand, T20 World Cup Semifinal – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probab (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நாளை முதல் அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளதால், இம்முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதன்படி நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் -இங்கிலாந்து vs நியூசிலாந்து 
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி 
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

குரூப் 1 பிரிவில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் இருப்பது பேட்டிங்கில் பலத்தை கூட்டியுள்ளது. மேலும் பந்துவீச்சில் ஆதில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன் ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு இவர்கள் சவாலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக விலகியுள்ளது அணிக்கு சற்று பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சாம் பில்லிங்ஸ், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அணியில் இருப்பதால் நிச்சயம் அது இங்கிலாந்துக்கு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக விளையாடி தற்போது அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது. 

அணியின் பேட்டிங்கில் கப்தில், மிட்செல், வில்லியம்சன், பிலீப்ஸ், நீஷம் ஆகியோரும் பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, இஷ் சோதி ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • இங்கிலாந்து வெற்றி - 13
  • நியூசிலாந்து வெற்றி - 07

உத்தேச அணி 

இங்கிலாந்து - சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஈயான் மோர்கன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித், மார்க் வூட்

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டெவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - டெவோன் கான்வே, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்
  • பேட்டர்ஸ் - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல்
  • ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி
  • பந்துவீச்சாளர்கள் - இஷ் சோதி, டிரென்ட் போல்ட், அடில் ரஷித்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை