இரண்டாவது டி20: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Jun 24 2021 13:13 IST
England vs Sri Lanka, 2nd T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை எளிதாக வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இலங்கை-இங்கிலாந்து இடையிலான இரண்டாவடு டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃப்பில் இன்று (ஜூன் 24) நடக்கிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : இங்கிலாந்து vs இலங்கை 
  • மைதானம்: சோபியா கார்டன், கார்டிஃப்
  • நேரம் : இரவு 10.30 மணி

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து அணி

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதற்கேற்றார் போல் நேற்றைய ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.

அதிலும் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். மேலும் டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டேவிட் மாலன் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். 

அதேபோல் ஈயன் மோர்கன், மோயின் அலி, சாம் கரண் என பல டி20 ஸ்பெஷலிஸ்டுகளும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை பலம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. 

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட், அதில் ரஷித் என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருப்பதும் அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

இலங்கை

குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி சமீப காலமாக சரிவர விளையாடமல் தோல்வியை தழுவி வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரையும் இழந்து தடுமாற்றத்தை சந்தித்தது. 

அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அணியில் போதிய அனுபவ வீரர்கள் இல்லாததாலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தினுடான சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர் சறுக்கல்களை சந்தித்து வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 

இருப்பினும் குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், குணதிலக, டிக்வெல்லா போன்ற அதிரடி வீரர்கள் ஓரளவேனும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்புகள் உருவாகும். 

பந்துவீச்சில் இசுரு உதானா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் எதிரணிக்கு சற்று நெருக்கடியை கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அசுர பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி எச்சிரமமும் இன்றி இலங்கை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

இதுவரை இங்கிலாந்து - இலங்கை அணிகள் 10 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 6 முறையும், இலங்கை அணி 4 முறையும் வெற்றிபெற்றுள்ளது. 

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஈயன் மோர்கன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், ஆதில் ரஷீத், மார்க் வுட்.

இலங்கை - தனுஷ்கா குணதிலக, ஆவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசுல் பெரேரா (கே), குசால் மெண்டிஸ், தாசுன் ஷானகா, தனஞ்சய் டா சில்வா, இசுரு உதனா, வாணிந்து ஹசரங்கா, அகில தனஞ்சய, துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், குசல் பெரேரா
  • பேட்ஸ்மேன்கள் - ஜேசன் ராய்,  தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ்
  • ஆல்ரவுண்டர்கள் - துசன் ஷனகா, சாம் கரண், வாணிந்து ஹசரங்கா
  • பந்து வீச்சாளர்கள் - கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை