வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Thu, May 15 2025 14:37 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது எதிவரும் மே 21ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது மே 30ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து இத்தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த அணியின் கேப்டனாக ஹீலி மேத்யூஸ் தொடர்கிறார். மேற்கொண்டு அணியின் துணைக்கேப்டனாக ஷமைன் காம்பேல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சினெல்லே ஹென்றி மற்றும் டியான்டிரா டோட்டின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனார்.

இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இந்த அணியில் முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் சாதாரண வீராங்கனையாக விளையாடவுள்ளார். அதேசமயம் மையா பவுச்சர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நட்சத்திர வீராங்கனை இஸி வாங் மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். முழு உடற்தகுதி இல்லாததால், இந்தத் தொடருக்கான அணியில் சோஃபி எக்லெஸ்டோன் சேர்க்கப்படவில்லை.

இதுதவிர்த்து ஒருநாள் அணியில் அறிமுக வீராங்கனை எமிலி அர்லெட் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டுபேட்ஸ்மேன்கள் ஆலிஸ் டேவிட்சன்-ரிச்சர்ட்ஸ் மற்றும் எம்மா லாம்ப் ஆகியோர் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளனர். அதேபோல் டாமி பியூமண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லின்சி ஸ்மித் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் மஹிகா கவுருக்கு ஒருநாள் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மகளிர் டி20 அணி: நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), எமிலி ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சாரா க்ளென், ஏமி ஜோன்ஸ், ஹீதர் நைட், பைஜ் ஸ்கோல்ஃபீல்ட், லின்சி ஸ்மித், இஸ்ஸி வோங், டானி வயட்-ஹாட்ஜ்.

இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணி: நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), ஆலிஸ் டேவிட்சன்-ரிச்சர்ட்ஸ், எமிலி ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, மஹிகா கவுர், சாரா க்ளென், ஏமி ஜோன்ஸ், ஹீதர் நைட், எம்மா லாம்ப், லின்சி ஸ்மித்.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஹீலி மேத்யூஸ் (கே), ஷெமைன் காம்பெல் (துணைக்கேப்டன்), ஆலியா அலீன், ஜஹ்ஸாரா கிளாக்ஸ்டன், அஃபி பிளெட்சர், செர்ரி ஆன் ஃப்ரேசர், ஷபிகா கஜ்னபி, ஜன்னில்லியா கிளாஸ்கோ, ரியலினா கிரிம்மண்ட், ஸைதா ஜேம்ஸ், கியானா ஜோசப், மாண்டி மங்ரு, அஷ்மினி முனிசர், கரிஷ்மா ராம்ஹராக், ஸ்டெஃபானி டெய்லர்.

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் தொடர் அட்டவணை

  • முதல் டி20 போட்டி - மே 21 - கேன்டர்பரி
  • இரண்டாவது டி20 போட்டி - மே 23 - ஹோவ்
  • மூன்றாவது டி20 போட்டி - மே 26 - செல்ம்ஸ்ஃபோர்டு
  • முதல் ஒருநாள் போட்டி - மே 30 - டெர்பி
  • 2வது ஒருநாள் போட்டி - ஜூன் 4 - லெய்செஸ்டர்
  • 3வது ஒருநாள் போட்டி - ஜூன் 7 - டவுண்டன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை