ENGW vs INDW, 3rd T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?

Updated: Wed, Jul 14 2021 17:55 IST
Image Source: Google

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கெதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 

இதில் ஒரே ஒருடெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்தும், மற்றொன்றில் இந்திய அணியை வெற்றிபெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செம்ஸ்போர்ட்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இப்போட்டிக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருவதால் நிச்சயம் இன்றைய போட்டில் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய மகளிர் அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு இன்றைய போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

அதேசமயம் ஹீத்தர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பேட்டிங், பந்துவீச்சு என சம பலத்துடன் இருப்பது, இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதை காட்டுக்கிறது. அதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டு.

போட்டி தகவகள்

  • மோதும் அணிகள் - இந்தியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
  • இடம் - கவுண்டி கிரிக்கெட் மைதானம், செம்ஸ்போர்ட்
  • நேரம் - இரவு 11 மணி
  • நேரலை - சோனி டென் 1

உத்தேச அணி

இங்கிலாந்து அணி- டேனியல் வியாட், டாமி பியூமண்ட், நடாலி ஸ்கைவர், ஹீதர் நைட் (கே), ஆமி எலன் ஜோன்ஸ், சோபியா டங்க்லி, கேத்ரின் பிரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென், மேடி வில்லியர்ஸ், ஃப்ரேயா டேவிஸ்

இந்திய அணி - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஹார்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கே), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்நே ராணா, அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை