ENGW vs INDW,1st T20I: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து வெற்றி!

Updated: Sat, Jul 10 2021 17:57 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நடாலி ஸ்கைவர் 55 ரன்களும், ஆலன் ஜோன்ஸ் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா அணி சார்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஷஃபாலி வர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 17 பந்தில் 6 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்தியா 8.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின் தொடர் மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகி விருது நடாலி ஸ்கைவருக்கு வழங்கப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை