எஸ்ஏ20 2025: இடம், போட்டி நேரம், நேரலை & அணிகளின் முழு வீவரம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது நாளை மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. அதன்படி, நளை நடைபெறும் எஸ்ஏ20 மூன்றாவது சீசனின் முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலகின் முன்னணி வீரர்கள் பலரும் இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெறும் இடம், போட்டி நேரம், இந்திய ரசிகர்கள் இத்தொடரை எவ்வாறு பார்பது மற்றும் ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்கள் என மொத்த விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம்.
எஸ்ஏ20 2025 சீசன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
SA20 2025 எப்போது நடைபெறும்?
ஜனவரி 9 அன்று தொடங்கி, பிப்ரவரி 08ஆம் தேதி வரை
SA 2025 மைதானங்கள்?
நியூலேண்ட்ஸ் (கேப் டவுன்), செஞ்சூரியன் பார்க் (பிரிட்டோரியா), கிங்ஸ்மீட் (டர்பன்), செயின்ட் ஜார்ஜ் பார்க் (Gqebraha), வாண்டரர்ஸ் (ஜோஹன்னஸ்பர்க்), மற்றும் போலண்ட் பார்க் (பார்ல்)
SA20 2025 நேரலை?
நடப்பு சீசன் எஸ்ஏ20 தொடரை இந்தியாவில் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் மாற்றும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைகாட்சி நேரலை ஒளிபரப்பு செய்கின்றன. இதுதவிர்து ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பை கண்டுகளிக்கலாம்
SA20 2025 அணிகள்
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
-
பிராண்டன் கிங் (வெஸ்ட் இண்டீஸ்), குயின்டன் டி காக், நவீன்-உல்-ஹக் (ஆஃப்கானிஸ்தான்), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து), ப்ரீனெலன் அண்டர்லைன்,டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ் (கேப்டன்), நூர் அகமது (ஆஃப்கானிஸ்தான்), ஹென்ரிச் கிளாசென், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், வியான் முல்டர், ஜூனியர் தாலா, பிரைஸ் பார்சன்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஜேசன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ் (ஆஸ்திரேலியா), ஷமர் ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), சிஜே கிங்.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
-
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), மொயின் அலி (இங்கிலாந்து), ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), மகேஷ் தீக்ஷனா (இலங்கை), டெவான் கான்வே (நியூசிலாந்து), ஜெரால்ட் கோட்ஸி,டேவிட் வைஸ் (நமீபியா), லியுஸ் டு ப்ளூய் (இங்கிலாந்து), லிசாட் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், டொனோவன் ஃபெரீரா, இம்ரான் தாஹிர், சிபோனெலோ மகன்யா, தப்ரைஸ் ஷம்சி, விஹான் லுபே, இவான் ஜோன்ஸ், டக் பிரேஸ்வெல் (நியூசிலாந்து), ஜேபி கிங் (ரூக்கி).
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்
-
ரஷித் கான் (கேப்டன்)(ஆஃப்கானிஸ்தான்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ககிசோ ரபாடா, டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), டெவால்ட் ப்ரீவிஸ், ரியான் ரிக்கல்டன், ஜார்ஜ் லிண்டே, நுவான் துஷாரா (இலங்கை), கானர் எஸ்டெர்ஹூய்சென், டெலானோ போட்ஜிட்டர், ராஸ்ஸி வான் டெர் டுசென், தாமஸ் கேபர், கிறிஸ் பெஞ்சமின் (இங்கிலாந்து), கார்பின் போஷ், கொலின் இங்க்ராம், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேன் பீட், டிரிஸ்டன் லூஸ் (ரூக்கி).
பார்ல் ராயல்ஸ்
-
டேவிட் மில்லர் (கேப்டன்), முஜீப் உர் ரஹ்மான் (ஆஃப்கானிஸ்தான்), சாம் ஹெய்ன் (இங்கிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), தினேஷ் கார்த்திக் (இந்தியா), குவேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, மிட்செல் வான் ப்யூரன், கீத் டட்ஜியோன், நகாபா பீட்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கோடி யூசுப், ஜான் டர்னர் (இங்கிலாந்து), தயான் கலீம், ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து), ரூபின் ஹெர்மன், திவான் மரைஸ் (ரூக்கி).
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்
-
அன்ரிச் நோர்ட்ஜே, ஜிம்மி நீஷம் (நியூசிலாந்து), வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆஃப்கானிஸ்தான்), லியாம் லிவிங்ஸ்டோன் (கேப்டன்)(இங்கிலாந்து), வில் ஸ்மீட் (இங்கிலாந்து), மைக்கேல் பிரிட்டோரியஸ், ரிலீ ரூஸோவ், ஈதன் போஷ், வெய்ன் பார்னெல், செனுரன் முத்துசாமி, கைல் வெர்ரைன், டேரின் டுபாவில்லன், ஸ்டீவ் ஸ்டோக், தியான் வான் வுரன், மார்க்வெஸ் அக்கர்மேன், எவின் லூயிஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கைல் சிம்மண்ட்ஸ், கீகன் லயன்-கேஷெட்,
Also Read: Funding To Save Test Cricket
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
- டாம் ஆபெல், ஓகுஹ்லே செலே, டேவிட் பெடிங்ஹாம், ஒட்னீல் பார்ட்மேன், ஜாக் க்ராலி, லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன், சைமன் ஹார்மர், ஜோர்டான் ஹெர்மன், மார்கோ ஜான்சன், பேட்ரிக் க்ரூகர், ஐடன் மார்க்ரம் (கேட்ச்), கிரேக் ஓவர்டன், காலேப் செலேகா, அண்டில் சிமெலேன், டேனியல் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பெயர்ஸ் ஸ்வான்போயல், ரோலோஃப் வான் டெர் மெர்வே