இந்த ஒரு விஷயத்தை சமாளிப்பது மிகவும் சிரமம் - டெம்பா பவுமா ஓபன் டாக்!

Updated: Tue, Sep 27 2022 22:23 IST
Facing new ball quite a challenge in India: Temba Bavuma (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை மாலை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, அதே புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. இதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக விளையாடப்போகும் கடைசி தொடரும் இதுவே ஆகும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் ஒரு செயலை மட்டும் சமாளிப்பது கஷ்டம் என தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்திய அணியின் ஓப்பனிங் பவுலர்களை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும். பவர் ப்ளேவில் அவர்கள் பந்தில் நல்ல ஸ்விங்கை ஏற்படுத்துவார்கள். அது தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் செய்வதை விட சிறப்பாக இருக்கும்.

புதிய பந்துகளில் இந்திய அணியை சமாளித்து நின்றுவிட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. எனவே எங்களின் ஒரே திட்டம் விரைவாக விக்கெட் விழுவதை தவிர்க்க வேண்டும். ஒரு நல்ல சூழலை உருவாக்கிவிட்டு, அதன்பின்னர் அதிரடி காட்ட வேண்டும். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவை முதல் சில ஓவர்களில் தாக்குப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் அவர் மிகவும் டேஞ்சரான வீரர்” எனக்கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் பவுலிங் தான் மோசமாக இருந்து வருகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவருமே இன்னும் ஃபார்முக்கு திரும்பவில்லை. இதனால் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தற்போது அர்ஷ்தீப் சிங்கின் மேல் தான் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை