டெல்லி கேப்பிட்டல்ஸின் துணைக்கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமனம்!
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேஎல் ராகுல் தான் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில், அவர் அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேலை நியமித்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைக்கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பினை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது சிறப்பு காணொளியின் மூலம் அறிவித்துள்ளது. அதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
ஃபாஃப் டூ பிளெசிஸ் குறித்து பேசினால் ஐபிஎல் தொடரில் புகழ்பெற்ற வீரர்களில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்காக 145 போட்டிகளில் விளையாடி 36 என்ற சராசரியில் 4571 ரன்களைச் சேர்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கடந்த ஐபிஎல் சீசனில் அவர் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அவரது தலைமையிலான ஆர்சிபி அணி கடந்த முறை பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய நிலையிலும், கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதன் காரணமாக இந்த ஐபிஎல் சீசன் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஃபாஃப் டூ பிளெசிஸை அந்த அணி விடுவித்தது. இதையடுத்து நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் டூ பிளெசிஸை ரூ.2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.