சக பீல்டர் மோதி காயமடைந்த டூ பிளெஸிஸ்; மருத்துவமனையில் அனுமதி!

Updated: Sun, Jun 13 2021 10:41 IST
Image Source: Google

அபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ், பெஸ்வ ஸால்மி அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியின் 7ஆவது ஓவரின் போது  டேவிட் மில்லர் அடித்து பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றது. அதனைத் தடுக்க குயிட்டா அணியில் இடம்பெற்ற தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டூ பிளெஸிஸ் அதனை தடுக்க ஓடினார்.

அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் என்பவரது காலில் அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த டூ பிளெஸிஸிக்கு அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

 

இதையடுத்து, டூ பிளெஸிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்பின் டு பிளெஸ்ஸிற்கு பதிலாக அயூப் இடம்பெற்று விளையாடுகிறார்.

மேலும் காயமடைந்த டூ பிளெஸ்ஸின் உடல் நிலை குறித்து இன்னும் சரியான தகவல் ஏதும் கிடைக்காததால், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை