இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் இம்மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மோத உள்ளது. இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு முன்பு ஆசிய கோப்பை நடைபெறுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை புதிய தேர்வு குழு தலைவர் இன்ஸமாம் உல் ஹக் அறிவித்திருக்கிறார். அதன்படி பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷான் மசூத் அதிரடியாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஷான் மசூத் இதுவரை 9 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். நடப்பாண்டில் அவர் நான்கு போட்டிகளில் விளையாடி மொத்தமே 52 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

Advertisement

இதில் ஒரு ஆட்டத்தில் 44 ரன்கள் அதிகபட்சமாக அவர் அடித்திருந்தார். இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இதேபோன்று பஹிம் அஷ்ரஃப் என்ற ஆல்ரவுண்டர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு திரும்பியிருக்கிறார். இது குறித்து பேசிய இன்ஸமாம் உல் ஹக், உலக கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதேபோன்று இலங்கைக்கு எதிரான தொடரில் இரட்டை சதம் விளாசிய சவுத் சக்கிலுக்கு ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைத்துள்ளது. மேலும் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை எமர்ஜிங் பிளேயர் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 71 பந்துகளில் 108 ரன்கள் விளாசிய இளம் வீர தாயப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று முன்னாள் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதும் ஆசிய கோப்பை தொடரில் சேர்க்கப்படவில்லை. ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பு இலங்கைக்குச் சென்று மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் உடன் பாகிஸ்தான் விளையாடுகிறது. அந்த தொடருக்கும் அதே அணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி : பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஃபகர் சமான், அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், சவுத் ஷகில், சல்மான் அலி அகா, இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவுஃப், நஷீம் ஷா, ஷாகின் ஆஃப்ரிடி, தயாப் தாஹிர், முகமது ஹாரிஸ், பஹிம் அஸ்ரப், முகமது வசீம்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News