விராட் கோலி தனது புகழாலும், அதிகாரத்தாலும் முற்றிலுமாக மாறிவிட்டார் - அமித் மிஸ்ரா!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் எனும் வர்லாற்று சாதனையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார்.
மேற்கொண்டு சமீபத்தில்ந் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்திருந்தார். மேலும் அப்போட்டியில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதுமட்டுமின்றி அப்போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் விராட் கோலி தனது ஆக்ரோஷமான அணுமுறையின் காரணமாக பலாரால் பாராட்டப்பட்டாலும், பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி அணிக்காக விளையாடிய விராட் கோலி, லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர் இடையிலான மோதல் என்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.
இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலியுடன் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடியவர் அமித் மிஸ்ரா. ஒரு காலத்தில் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர், ஆனால் அவர்களுக்கிடையேயான உறவு இப்போது முன்பு போல் இல்லை. இந்நிலையில், தற்போது விராட் கோலி தனது புகழாலும், அதிகாரத்தாலும் முற்றிலுமாக மாறிவிட்டார் என அமித் மிஸ்ரா கூறியுள்ள கருத்தானது ரசிகர்கள் மத்தியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி குறித்து பேசியுள்ள அமித் மிஸ்ரா, “விராட் கோலியிடம் நிறைய மாற்றங்களை கண்டுள்ளேன். எங்களிடையேயான உரையாடல்கள் தற்போது குறைந்துவிட்டன. அந்தப் புகழும், அதிகாரமும் தான் விராட்டின் மாற்றத்துக்குக் காரணம். ஏனென்றால், அதிகாரம் இருக்கும்போது, எல்லாரும் சுயநலத்திற்காகத்தான் பேசுகிறார்கள் என்று உணர்கிறார்கள். ஆனால் நான் அப்படி இருந்ததில்லை. எனது சொந்த நலனுக்காக நான் யாரையும் அழைத்ததில்லை. நான் அவரிடம் எதுவும் சொல்லக்கூட போவதில்லை.
மேலும் கடந்த ஐபிஎல் தொடரின் போது கௌதம் கம்பீரிடம் நான் ஒரு நல்ல விஷயத்தைப் பார்த்தேன். ஏனெனில் இருவருக்கும் இடையேயான பிரச்சனையின் போது கௌதம் கம்பீர் தான் விராட் கோலியுடன் நடந்த சண்டையை முடித்துக் கொண்டார். அவரைக் கட்டிப்பிடித்தார். ஆனால், என்னைக் கேட்டால் விராட் கோலி தான் அதைச் செய்திருக்க வேண்டும், ஏனெனில் அவர் பிரச்சினையை பெரிதாக்கினார் மற்றும் இழுத்தார். அந்த நேரத்தில் கௌதம் கம்பீர் தனது பெரிய மனதைக் காட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அமித் மிஸ்ராவின் இக்கருத்துகளானது விராட் கோலி மற்றும் இந்திய ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அமித் மிஸ்ராவின் கருத்துகள் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அக்கருத்து ஆதரவராகவும், எதிராகவும் ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.