ரஞ்சி கோப்பை : இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி!
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அதன்பின் காரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரின் காலிறுதி, அரையிறுதிப் போட்டொ ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை - மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பெங்களூரில் நடைபெற்ற மும்பை - உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் 4 நாளில் இறுதியில் 746 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் காரணமாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2016-17-க்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது
அலூரில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் பெங்காலுக்கு எதிராக மத்தியப் பிரதேச அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
ஒதையடுத்து நாளை (ஜூன் 22) பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இலவச அனுமதி என்பதால் இறுதிச்சுற்றைக் காண ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.