பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!

Updated: Sun, Mar 31 2024 20:05 IST
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக அப்துல் சமத் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 29 ரன்களைச் சேர்த்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் விருத்திமான் சஹா 25 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 36 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய சாய் சுதர்ஷன் தனது பங்கிற்கு 45 ரன்களைச் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 44 ரன்களைச் சேர்த்துடன் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், இப்போட்டி சிறந்த ஒரு ஆட்டமாக இருந்தது. இப்போட்டியின் இறுதியில் கொஞ்சம் சவாலாக இருந்தது. ஒருவேளை நாங்கள் இப்போட்டியில் மேலும் 10 முதல் 15 ரன்களைச் சேர்த்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். இன்றைய போட்டியில் குஜராத் அணி வீரர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 

மேலும் எங்களது வீரர்கள் யாரும் பேட்டிங்கில் சரிவர செயல்படவில்லை. அதிலும் யாரும் அரைசதம் கூட தொடவில்லை. இன்றைய போட்டியில் மைதானம் சற்று மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம். அதன் காரணமாக இன்று நாங்கள் ஆஃப் பின்னர்கள் உள்பட, 8 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தின் தன்மை ஒரே மாதிரிதான் இருந்தது என நினைக்கிறேன். 

ஏனெனில் நாங்களும் பந்துவீச்சில் எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினோம். இதுதான் டி20 கிரிக்கெட். கடந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் மிகவும் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் இன்று நாங்கள் பேட்டிங்கி சரிவர செயல்படவில்லை. அதன் காரணமாகவே இப்போட்டியில் நாங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை