103 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட ஃபின் ஆலான்; வைரலாகும் காணொளி!

Updated: Tue, Mar 18 2025 22:53 IST
Image Source: Google

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஒரு அபாரமான சிக்ஸர் ஒன்றை அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன்படி பாகிஸ்தான் வீரர் ஜஹாந்தத் கான் வீசிய ஷார்ட் பந்தை எதிர்கொண்ட ஃபின் ஆலான் தனது முன் காலை நகர்த்தி, பந்தை டீப் மிட்-விக்கெட் பகுதியில் விளையாடி ஒரு பெரிய சிக்ஸர் அடித்தார். அந்த சிஸரானது 103 மீட்டர் தூரம் சென்றதுடன், அருகிலிருந்து மைதானத்தில் சென்று விழுந்தது. இந்நிலையில் ஃபின் ஆலன் அடித்த இந்த சிக்ஸர் குறித்த காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியைப் பற்றிப் பேசுகையில், மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. .அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில்அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களை சேர்க்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனையடுத்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செஃபெர்ட் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களையும், ஃபின் ஆலான் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் மிட்செல் ஹெய் 21 ரன்களைச் சேர்க்க, நியூசிலாந்து அணி 13.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இந்த டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிம் செஃபெர்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை